அரியலூர், ஆக. 21: அரியலூர் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி வாரச்சந்தை, செட்டிஏரி, பள்ளேரி, அய்யப்பனேரி ஆகியவற்றுக்கான குத்தகை ஏலம் நேற்று விடப்பட்டது. நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையர் முத்துசாமி தலைமை வகித்தார். மேலாளா் சரஸ்வதி, வருவாய் ஆய்வாளர் வெள்ளத்துரை உட்பட பலரும் கலந்து கொண்டனர். ஏலத்தில் 50 க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஏலம் எடுத்தனர்.
அதில் வாரச்சந்தையை ரூ.34.77 லட்சத்துக்கு சுரேஷ் என்பவரும், செட்டிஏரியை ரூ.62,500-க்கு ஜெயகாந்தன் என்பவரும், பள்ளேரியை ரூ.64,500-க்கு ஆனந்தன் என்பவரும், அய்யப்பனேரியை ரூ.74.500-க்கு சசிக்குமார் என்பவரும் குத்தகைக்கு எடுத்தனர்.