அரியலூர், நவ.19: அரியலூர் அண்ணாசிலை அருகே ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், தலித்துகள், பழங்குடியினர், சிறுபான்மையினர் மற்றும் பெண்கள் மீதான வன்கொடுமைகளை தடுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலர் நடராஜன் தலைமை வகித்து கண்டன உரையாற்றினார். மாநில கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் தண்டபாணி முன்னிலை வகித்து பேசினார். முன்னாள் மாவட்டச் செயலர் உலகநாதன், அரியலூர் ஒன்றியச் செயலர் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.


