Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

செந்துறையில் நாளை நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாம்

அரியலூர்,செப்.19: செந்துறையில் நாளை (20ம்தேதி) நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாம் நடக்கிறது. தமிழ்நாடு முழுவதும் நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாம் துவக்க விழா கடந்த 2ம்தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைக்கப்பட்டது. நமது அரியலூர் மாவட்டத்தில் வரும் 20ம்தேதி குமிழியம் வட்டாரம், செந்துறை பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இம்முகாம் நடைபெற உள்ளது.

மேலும், வருகிற 20ம்தேதி குமிழியம் வட்டாரம், செந்துறை பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற இருக்கும் நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாமில் சிறப்பு பிரிவு மருத்துவர்களான எலும்பு முறிவு மருத்துவர், மனநல மருத்துவர், கண் மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவர் மற்றும் பொது மருத்தும் மற்றும் சர்க்கரை நோயியல் மருத்துவர், காது, மூக்கு, தொண்டை மருத்துவர், பல் மருத்துவர், மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவம், நரம்பியல் மருத்துவர், தோல்நோய் மருத்துவம், இருதயவியல் மருத்துவர், கதிரியியல் மருத்துவர், ஆகியோர் இம்மருத்துவ முகாமில் பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க உள்ளனர்.

மேலும், எக்கோ கார்டியோகிராம், அல்ட்ராசோனாகிராம், நடமாடும் எக்ஸ்ரே வாகனம், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டை, மாற்றுத்திறனாளி அடையாள அட்டை பெறுவது மற்றும் இரத்த பரிசோதனை சேவைகள் வழங்கப்பட உள்ளன. எனவே பொதுமக்கள் அனைவரும் இம்மருத்துவ சேவை முகாமினை பயன்படுத்தி கொள்ளுமாறு கலெக்டர் ரத்தினசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.