அரியலூர், ஆக. 18: அரியலூர் மின் கோட்டம் சார்பில், கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் நாளை ( 19ம்தேதி ) மின் நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டம் நடைபெறுகிறது என தமிழ்நாடு மின்வாரிய அரியலூர் கோட்ட செயற் பொறியாளர் அய்யனார் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் அரியலூர் கோட்டம் சார்பாக நாளை ( 19ம்தேதி ) காலை 11 மணியளவில் ”மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்” மேற்பார்வை பொறியாளர் மற்றும் பெரம்பலூர் மின் பகிர்மான வட்டம் மற்றும் பெரம்பலூர் தலைமையில் அரியலூர் ராஜாஜி நகர் காலேஜ் ரோட்டில் அமைந்துள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது.எனவே அது சமயம் இக்கோட்ட மின்நுகர்வோர்கள், விவசாயிகள் மற்றும் விவசாய பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுக்கள் மூலம் மேற்பார்வை பொறியாளர் அவர்களிடம் தெரிவித்து பயனடைய வேண்டும்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.