அரியலூர், ஆக.15: அரியலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துத் தரக் கோரி, அக்கல்லூரி நுழைவு வாயில் முன் இந்திய மாணவர் சங்கத்தினர் நேற்று வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், போதிய அளவு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கழிவறை, சாலை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும் என்று வலியுறுத்தி முழக்கமிட்டனர்.தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர், கோரிக்கைகள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் தெரிவித்து, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து அவர்கள் கலைந்துச் சென்றனர்.