தா.பழூர், அக். 13: அரியலூர் மாவட்டம், தா.பழூர் வட்டாரத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பாக 33 ஊராட்களில் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களின் குழு கூட்டமைப்பின் மூலம் பொதுக்குழு கூட்டம் நடைப்பெற்றது. மேலும், சுத்தமல்லி ஊராட்சியில் பொதுக்குழு நடைப்பெற்றது. இதில், கூட்டமைப்பின் வரவு செலவு மற்றும் திட்ட செயல்பாடுகள் தாயுமானவர் திட்ட கணக்கெடுப்பு, சமுதாய சார்ந்த அமைப்புகளுக்கு உள் தணிக்கை, வெளி தணிக்கை, விபரம் கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் பயிற்சி குறித்து விளக்கம் அளித்தல் ஊரக சுய வேலைவாய்ப்பு நிறுவனத்தில் பயிற்சி விபரங்கள் மேற்கண்ட பொதுக்குழு கூட்டத்தில் எடுத்து கூறப்பட்டது.
இந்த கூட்டத்தில், மகளிர் திட்டம் உதவி திட்ட அலுவலர் கெளதமன் கலந்துகொண்டு மகளிர் திட்ட செயல்பாடுகளை பற்றி விளக்கம் அளித்தார். பின்னர், கணக்காளர், இந்திரா பொதுக்குழு கூட்டத்தில் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு வரவு செலவு கணக்குகளின் விபரத்தை பொதுக்குழு உறுப்பினர்களுக்கு வாசித்தார். இந்த கூட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள், ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பு செயலாளர் பொருளாளர் கலந்துக் கொண்டனர். வட்டார இயக்க மேலாளர் இராமலிங்கம் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பிரபாகரன், மணிமேகலை, இந்துஜா ஜீவிதா, மற்றும் பாலின வள மையம் மேலாளர் தேன் மொழி ஆகியோர் கலந்து கொண்டனர்.