அரியலூர், செப்.13: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலர் மறைந்த சீத்தாராம்யெச்சூரி நினைவு நாளையொட்டி, நேற்று அரியலூரிலுள்ள அக்கட்சி அலுவலகத்தில், சீத்தாராம்யெச்சூரியின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உடற்கூறாய்வு மருத்துவர் நெடுஞ்செழியன் கலந்து கொண்டு, சீத்தாராம்யெச்சூரியின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, அவரின் தியாகம், அர்ப்பணிப்பு, கட்சிப் பணிகள், உலக நாடுகளின் பிரச்னைக்கு தீர்வு கண்டது குறித்து பேசினார்.
தொடர்ந்து அக்கட்சியின் மாவட்டச் செயலர் இளங்கோவன், மூத்த தலைவர் சிற்றம்பலம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மணிவேல், துரைசாமி, கந்தசாமி, வெங்கடாசலம், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பத்மாவதி, ரவீந்திரன், மலர்கொடி, குணா, சந்தானம், ஒன்றியச் செயலர்கள் செந்துறை அர்ஜூனன், திருமானூர் சாமிதுரை, அரியலூர் அருண்பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, நினைவஞ்சலி செலுத்தினர். இதில் உடல் உறுப்பு தானம் செய்ய விரு ம்பிய 15 பேர் தங்களது பெய ர்களை பதிவு செய்தனர்.