அரியலூர், நவ.12: அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே பிறந்து சில நாட்களே ஆண் சிசு சடலத்தை மீட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர். செந்துறை அருகேயுள்ள குழுமூர் கிராமத்தில், காரப்பாடி செல்லும் சாலையில் உள்ள ஒரு குப்பை குவியலில், நேற்று அழுகிய நிலையில் பிறந்த சில நாள்களே ஆன சிசு ஒன்றை, அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் கண்டனர்.
பின்னர், அதுகுறித்து, செந்துறை காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து வந்த காவல் துறையினர், சிசு சடலத்தை மீட்டு, அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, பிறந்து சில நாட்களான சிசுவை குப்பைத்தொட்டியில் வீசிச் சென்றது யார் என என வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
