அரியலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் குடும்பத்தைச்சேர்ந்த பெண்கள் இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்
அரியலூர், நவ. 12: அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து, கலெக்டர் ரத்தினசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட தையல் பயிற்சி முடித்து சான்று பெற்றுள்ள முன்னாள் படைவீரரின் மனைவி அல்லது கைம்பெண் மற்றும் திருமணமாகாத மகள்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்குதல் திட்டம் முன்னாள் படைவீரர் நலத்துறையின் வாயிலாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
எனவே, இத்திட்டத்தின் கீழ் இலவச தையல் இயந்திரம் பெற அரியலூர் மாவட்டத்தை சார்ந்த 40 வயதிற்குட்ப்பட்ட அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் தையல் பயிற்சி முடித்து சான்று பெற்றுள்ள முன்னாள் படைவீரரின் மனைவி அல்லது கைம்பெண் மற்றும் திருமணமாகாத மகள்கள், அரியலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் 30.11.2025குள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறுமாறு அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
