அரியலூர், நவ.12: அரியலூர் அண்ணா சிலை அருகே இந்தியத் தேர்தல் ஆணையத்தை கண்டித்தும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர சீராய்வு (எஸ்ஐஆர்) எதிர்த்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தக்கு, திமுக சட்டதிட்ட திருத்தக்குழு இணைச் செயலாளர் சுபா.சந்திரசேகர் தலைமை வகித்தார். துணை பொதுச் செயலாளரும், மாநிலங்களவை குழுத் தலைவருமான திருச்சி என்.சிவா கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில், எம்எல்ஏக்கள் அரியலூர் .சின்னப்பா, ஜெயங்கொண்டம் க.சொ.க.கண்ணன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஆ.சங்கர், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் சிவா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில குழு உறுப்பினர் ஐவி நாகராஜன் மற்றும் மாவட்டச் செயலாளர் இளங்கோவன், மதிமுக மாவட்டச் செயலாளர் ராமநாதன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் நடராஜன், எஸ்டிபிஐ கட்சி அமீர்சுல்தான் மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
