ஜெயங்கொண்டம், செப். 11: அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வட்டார வள மைய மேற்பார்வையாளர் அருமைராஜ் தலைமையில் ஆசிரியர் பயிற்றுநர்கள் இடைநின்ற மாணவர்களை கண்டறியும் களப்பணியில் ஈடுபட்டிருந்தனர். வரதராஜன்பேட்டை பகுதியில் கைக்களத்தெருவில் மரியஆனந், ஆரோக்கியமேரி குடும்பத்தில் ஜோஸ் கொலஸ்டிகா மேரி என்ற மாணவியும், ஜோசப் கான் சாகிப் என்ற மாணவனையும் கண்டறிந்தனர்.
குடும்ப சூழ்நிலை காரணமாக 5ம் வகுப்பிற்கு பிறகு பள்ளிக்கு வரவில்லை. மேலும் எந்த பள்ளியிலும் சேரவில்லை. இடம் பெயர்ந்து விட்டார்கள். தற்போது மீண்டும் பெற்றோர் மற்றும் குழந்தைகள் தங்கள் குடியிருப்பு பகுதியான வரதராஜன்பேட்டை கைக்களத்தெருவிற்கு வந்ததால் குழந்தைகளிடம் பேசி மீண்டும் தொடர்ந்து கல்வி பெற விளந்தை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நேற்று அவர்களின் வயதுக்கேற்ற வகுப்பில் நேரடியாக 8ம் வகுப்பில் சேர்க்கப்பட்டார்கள்.
களப்பணியில் மேற்பார்வையாளர் அருமைராஜ், ஒருங்கிணைப்பாளர் ஆசைத்தம்பி, இரவிச்சந்திரன், சத்தியபாமா, அகிலா, உத்திராபதி மற்றும் சரிதா ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். பொறுப்பு தலைமையாசிரியர் மனோகரன் பெற்றோர், மாணவ, மாணவிகள் சம்மதத்துடன் அட்மிஷன் செய்தார்.