தா.பழூர், டிச.8: அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் நாயகனைப்பிரியாள் கிராமத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, மாவட்ட கழக செயலாளரும், போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சருமான சா.சி.சிவசங்கர் வழிகாட்டுதலின்படி தா.பழூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட மருத்துவர் அணி தலைவர் சங்கர் வரவேற்புரை ஆற்றினார். ஒன்றிய கழக செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் தலைமையில், கிளை கழக நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் தலைமை கழக இளம் சொற்பொழிவாளர் கோகுல் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் மாவட்ட பார்வையாளர் முருகேசன்,
அவைத்தலைவர் சூசைராஜ், ஒன்றிய துணை செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட அணி நிர்வாகிகள் சங்கர், கார்த்திகேயன், கார்த்திகைகுமரன், சம்மந்தம், எழிலரசி அர்ச்சுனன், மகாலிங்கம் மற்றும் ஒன்றிய அணி நிர்வாகிகள், கிளை கழக செயலாளர்கள், கழக நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக வாக்குச்சாவடி முகவர் ஜெயராஜ் நன்றி கூறினார்.


