அரியலூர், நவ. 6: அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்தமிழ்செல்வன் மற்றும் துணைக் காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றனர். அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் வாரந்தோறும் புதன்கிழமையன்று நடைபெற்று வருகிறது.
அதன்படி, நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், எஸ்பி விஷ்வேஷ் பா.சாஸ்திரி உத்தரவின்படி சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 25 மனுதாரர்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்தமிழ்செல்வன் மற்றும் துணைக் காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் ஆகியோரிடம் பொதுமக்கள் நேரடியாக மனுக்களாக அளித்தனர். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து அவர்களின் மனுக்கள் மீது உடனடியாக உரிய மேல் நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
