ஜெயங்கொண்டம், ஆக.6: உடையார்பாளையம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெண் குழந்தைகளுக்கான தற்காப்புபயிற்சி தொடங்கப்பட்டது. நிகழ்வில் தலைமையாசிரியர் முனைவர் முல்லைக்கொடி தலைமையேற்று தற்காப்பு பயிற்சியை தொடங்கி வைத்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சேப்பெருமாள், உதவி. தலைமை ஆசிரியர் இங்கர்சால் முன்னிலை வகித்தனர்.
அரசு உத்தரவின்படி மூன்று மாதங்களுக்கு, வாரத்தில் இரண்டு நாட்கள் ஒரு மணிநேரம் பயிற்சி வழங்க தற்காப்பு கலை நிபுணர் சிலம்பேஸ்வரி கலந்து கொண்டு மாணவிகளுக்கு தற்காப்புகலையின் அவசியத்தையும், இந்த பயிற்சியை திறம்பட கற்றுகொண்டால் துணிச்சலும், தன்னம்பிக்கையும், மனம் ஒருநிலை பெற்று கல்வியில் கவனம் செலுத்தி அதிக மதிப்பெண் எடுக்க வழிவகுக்கும்.
மேலும் உடலும், மனமும் வலிமை பெற்று உடல்ஆரோக்கியம் ஏற்படும் என்று கூறினார். கராத்தே, சிலம்பம் பற்றி அறிமுகம் கூறி பயிற்சியை தொடங்கினார். இதில் ஆசிரியர்கள் அமுதா, தமிழரசி, பாவை சங்கர் தமிழாசிரியர் இராமலிங்கம், லூர்துமேரி கலந்து கொண்டனர்.