Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

திருமானூர் வட்டார விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு திட்டத்தில் இயந்திர நடவுக்கு மானியம்

ஜெயங்கொண்டம்: இது தொடர்பாக திருமானூர் வட்டார வேளாண்மை துணை இயக்குனர் கலைமதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்;அரியலூர் மாவட்டம் திருமானூர் வட்டாரத்தில் 2025ம் ஆண்டு குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் குறுவை நெல் இயந்திர நடவு செய்யும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்பட உள்ளது.இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர் அல்லது கீழப்பழூரில் உள்ள திருமானூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி தங்களது பெயர், கிராமம், நிலத்தின் புலஎண் போன்ற விவரங்களை தெரிவித்து முன்பதிவு செய்து கொள்ளுமாறு திருமானூர் வட்டார வேளாண்மை துறை சார்பில் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இயந்திர நடவு செய்யும் விவசாயிகள் தங்கள் நிலத்தின் சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு பாஸ் புத்தக நகல், புவியிட அமைப்பு (geo tagging) குறியீடுடன் கூடிய இயந்திர நடவு புகைப்படம் ஆகிய ஆவணங்களை சமர்ப்பித்து இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம் என திருமானூர் வட்டார விவசாயிகளை வேளாண்மை துறை அலுவலர்கள் கேட்டுக்கொண்டனர். இத்துடன் குருவை பருவத்திற்கான ‘கோ51’ ரகத்தின் சான்று பெற்ற நெல் விதைகள், நெல் நுண்ச்சத்து மற்றும் உயிர் உரங்கள் திருமானூர் வட்டார வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் துணை வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டு மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த இடுபொருள்களை பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.