Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

மேலூர் ஊராட்சியில் அரசின் சாதனைகள் புகைப்பட கண்காட்சி

ஜெயங்கொண்டம், ஜூலை 30: மேலூர் ஊராட்சியில் வைக்கப்பட்டிருந்த அரசின் சாதனைகள் புகைப்பட கண்காட்சியை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். அரியலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேலூர் ஊராட்சியில் பொதுமக்கள் பார்வையிட வைக்கப்பட்டிருந்தன,

இப்புகைப்பட கண்காட்சியில் தமிழ்நாடு முதல்வரால் கடந்த நாண்கு ஆண்டுகளாக துவக்கி வைக்கப்பட்ட நலத்திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த புகைப்படங்கள் அமைச்சர்கள் ,மாவட்ட ஆட்சித்தலைவர், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு செயல்படுத்திய நலத்திட்டங்கலான, நான் முதல்வன், இல்லம் தேடி கல்வி, புதுமைப்பெண் திட்டம், தமிழ்புதல்வன் ,கலைஞர் கனவு இல்லம், விடியல் பயணம், நான் முதலவன் உங்களைத்தேடி உங்கள் ஊரில்,

கள ஆய்வில் முதல்வர், வேலை வாய்ப்பு முகாம்கள், கலைஞர் கைவினைஞர் திட்டம், இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 குறித்த புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. இப்புகைப்பட கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு தமிழக அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து தெரிந்து கொண்டனர்.