ஜெயங்கொண்டம், ஆக.1: ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் ரூ.2.25 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகளை எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் துவக்கி வைத்தார். அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, ஜெயங்கொண்டம் ஒன்றியம், கழுவந்தோண்டி ஊராட்சியில் ரூ 37.39 லட்சம் மதிப்பீட்டில் கழுவந்தோண்டி முதல் பெரியவளையம் வரை தார்சாலை அமைத்தல், பிள்ளைப்பாளையம் ஊராட்சியில் ரூ.50.20 லட்சம் மதிப்பீட்டில்,
பிள்ளைப்பாளையம் வடவார் முதல் கொல்லாபுரம் வரை தார்சாலை அமைத்தல், முத்துசேர்வாமடம் ஊராட்சியில் நபார்டு 2025-2026 திட்டத்தின்கீழ், ரூ.70.33 லட்சம் மதிப்பீட்டில், ரெட்டிப்பாளையம் முதல் மீன்சுருட்டி வரை தார்சாலை அமைத்தல், இளையபெருமாள்நல்லூர் ஊராட்சியில், 15வது நிதிக்குழு மான்யம் திட்டத்தின்கீழ், ரூ.45 லட்சம் மதிப்பீட்டில், சத்திரத்தில் புதிய துணை சுகாதார நிலையம் கட்டிடம் கட்டுதல், இளையபெருமாள்நல்லூர் ஊராட்சியில் ரூ.22.14 லட்சம் மதிப்பீட்டில், சத்திரம் புது ஆதி திராவிடர் தெரு முதல் அழகர்கோயில் வரை தார்சாலை அமைத்தல் ஆகிய பணிகளை எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் துவக்கி வைத்தார்.
மேலும், காட்டகரம் ஊராட்சி, மண்டபத்தேரியில், மீன்சுருட்டி கூட்டுறவு சங்கத்திற்கு உட்பட்ட மண்டபத்தேரி புதிய நகரும் நியாய விலைக் கடையை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட கூட்டுறவு துணை பதிவாளர் சாய்நந்தினி, வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) கஸ்தூரி, கூட்டுறவு சார்பதிவாளர் சுரேஷ், ஜெயங்கொண்டம் மேற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் தனசேகர், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் திருமாவளவன், ஜெயங்கொண்டம் கிழக்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் கணேசன் மற்றும் அரசு அலுவலர்கள், கிளை கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.