Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பொறியியல் படிப்புக்கான தரவரிசையில் அரியலூர் மாணவர் மாநில அளவில் 3ம் இடம் பெற்று அசத்தல்

தா.பழூர், ஜூன் 28: அரியலூர் மாவட்டம் கீழ மைக்கேல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மைக்கேல்ராஜ் மகன் அமலன் ஆண்டோ. இவர் குழவடையான் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து, பொதுத்தேர்வில் 600க்கு 598 மதிப்பெண் எடுத்திருந்தார். இந்நிலையில், பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப்பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில், 200க்கு 200 கட் ஆஃப் மதிப்பெண்களுடன் மாணவர் அமலன் ஆண்டோ மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்து அசத்தியுள்ளார். இதனையடுத்து, மாணவனின் குடும்பத்தினர் அவருக்கு இனிப்புகள் வழங்கி பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.