Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வேளாண்மை-உழவர் நலத்துறை தகவல் அரியலூரில் நாளை மாலை 3 மணிக்கு ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் கலெக்டர் தகவல்

அரியலூர், அக். 23: அரியலூர் மாவட்டத்தில் நாளை காலை நடைபெற இருந்த ஓய்வூதியர் குறை தீர் கூட்டம், மாலை 3 மணியளவில் நடைபெறும் என கலெக்டர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

கலெக்டர் ரத்தினசாமி வெளியிட்ட செய்தி குறிப்பு:

அரியலூர் மாவட்டத்தில் நாளை 24 (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் மாவட்ட கலெக்டர் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுவதாக இருந்த ஓய்வூதியர் குறை தீர்க்கும் கூட்டம் நிர்வாக காரணங்களால், நாளை மாலை 3 மணியளவில் நடைபெறும் என மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி, தனது ெசய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.