Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு இராவுத்தன்பட்டியில் திமுக தெருமுனை பிரசாரம்

அரியலூர், டிச.15: அரியலூர் மாவட்டம் அரியலூர் மத்திய ஒன்றிய திமுக சார்பில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தெருமுனைப் பிரசாரம் இராவுத்தன்பட்டியில் நேற்று நடைபெற்றது. அரியலூர் மாவட்ட கழக செயலாளர் போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சருமான சா.சி. சிவசங்கர் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற தெருமுனைப் பிரசாரக் கூட்டத்தில் அரியலூர் மத்திய ஒன்றிய கழகச் செயலாளர் இளையராஜன் தலைமையில் நடைபெற்றது.

இராவுத்தன்பட்டி கிராமத்தில் நடைபெற்ற தெருமுனைப் பிரசார கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் பென்னேரி சிவா சிறப்புரையாற்றினார். இதில் தமிழ்நாடு முதலமைச்சரின் மக்கள் நல திட்டங்களான மகளிர் விடியல் பயணம் புதுமைப்பெண் தமிழ் புதல்வன் மகளிர் உரிமைத்தொகை இல்லம் தேடி கல்வி மக்களை தேடி மருத்துவம் உங்களுடன் ஸ்டாலின் வயது முதிர்ந்தோர்க்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் கொடுக்கப்படும் தாயுமானவர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் சிறப்புகளை விளக்கினார்.

இக்கூட்டத்தில் நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலு, அவைத் தலைவர் முத்துசாமி, அரியலூர் மத்திய ஒன்றியத்திற்கு அனைத்து மாவட்ட அணி பொறுப்பாளர்களும் ஒன்றிய நிர்வாகிகளும் கிளைச் செயலாளர்களும் BLA2 மற்றும் BDA , BLC உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட, மாநில, ஒன்றிய கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.