ஜெயங்கொண்டம் டிச.12: உடையார்பாளையம் அரசுமகளிர் மேல்நிலைப்பள்ளியில் மனித உரிமைகள் தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்வில் உதவித்தலைமை ஆசிரியர் இங்கர்சால் தலைமையேற்றார். ஆசிரியர் செல்வராஜ் வரவேற்றார். முதலில் மனித உரிமைகள்தின உறுதிமொழி எடுக்கப்பட்டது. ஆசிரியர் சாந்தி கலந்து கொண்டு 1948ம் ஆண்டு டிசம்பர் 10ம் நாள் நடைபெற்ற ஐநா பொது சபையால் அனைத்துலக மனித உரிமைகளின் பாதுகாப்பை வலியுறுத்தி, மனித உரிமைகள் சட்டம் பிரகடனம் செய்யப்பட்டது. 1950ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி முதல் மனித உரிமைகள்தினம் கொண்டாடப்படுகிறது.
சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்கிற சமத்துவ உரிமை, பேச்சு, எழுத்து மற்றும் எதையும் எதிர்த்து கருத்து கூறுவதற்கான உரிமை, கல்விகற்கும் உரிமை, சரியான நீதியை பெறுவதற்கான உரிமை என இந்திய அரசியல் சட்டத்தால் அதன் குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. உரிமைகள் இழப்பு தான் உலகில் உள்ள அத்தனை பிரச்சனைக்கும் ஆணிவேராக அமைகிறது அதனால் எவ்வித ஏற்றத்தாழ்வுகளும், பாகுபாடுகளும் இல்லாமல் ஒரு மனிதனுக்காக சகல உரிமைகளையும் உறுதிப்படுத்துவதே இதன் முழு நோக்கமாகும்.
மாணவிகளாகிய நீங்கள் இந்தநாளில் மனித உரிமைகளை பேணுவோம் மானுடம் வெல்வோம் என சபதமேற்போம் என்றார். நிகழ்வில் ஆசிரியர்கள் வனிதா, அமுதா, தமிழரசி, பாவைசங்கர், தமிழாசியர் இராமலிங்கம், இராஜசேகரன் கலந்து கொண்டனர். முடிவில் உடற்கல்விஆசிரியர் ஷாயின்ஷா நன்றி கூறினார்.


