Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்களை வரன்முறைப் படுத்த இணையதளத்தில் 2026 ஜூன் 30 வரை விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டை, ஜூலை 10: கடந்த 2011 ஜனவரி 1ம் தேதி அன்று அல்லது அதற்கு முன்னர் கட்டப்பட்டு இயங்கிவரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டடங்களுக்கு, வரன்முறைப் படுத்தும் திட்டத்தின் கீழ், இணையதளம் மூலம் ஆடுத்த ஆண்டு ஜூன் மாதம் 30 வரை விண்ணப்பிக்கலாம். அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டடங்களுக்கு, வரன்முறைபடுத்தும் திட்டத்தின் கீழ் கடந்த 2011 ஜனவரி 1ம் தேதி அன்று அல்லது அதற்கு முன்னர் கட்டப்பட்டு இயங்கிவரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டடங்களுக்கு,

வரன்முறைப் படுத்தும் திட்டத்தின் கீழ், இணையதளம் மூலம் விண்ணப்பிக்க மீண்டும் ஒரு வாய்ப்பாக கடந்த 1ம் தேதி முதல் ஆடுத்த ஆண்டு ஜூன் மாதம் 30 வரை ஓராண்டுகாலம் நீட்டிப்பு செய்து, ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணையில் குறிப்பிட்டப்பட்ட வழி காட்டுதல்களில் எவ்விதமாற்றமும் இல்லாமல் அரசாணை எண்.92 வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் (ந.வ(3) துறை நாள். 26.6.2025-ல் ஆணைபிறப்பிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு, கட்டப்பட்டுள்ள அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்கள் மலையிடப்பகுதியில் (HACA) அமையும் பட்சத்தில் அரசு கடிதம் எண்.15535/ந.வ.4(3)2019, நாள். 18.02.2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து வழிமுறைகளை பின்பற்ற தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.tcponline.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம் என இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது. இந்த வாய்ப்பினை தவறாது பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.