திருப்பூர், மார்ச் 15: தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் முத்தமிழ் ராஜ் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் சத்துணவு மற்றும் அங்கன்வாடிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் 6750 ரூபாயை அகவிலைப்படியுடன் வழங்கிட வேண்டும். ஈமக்கிரியை சடங்கு நிதி 25 ஆயிரம் ரூபாய் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
மாவட்ட செயலாளர் பரிபூரணம் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இந்நிகழ்வில் முன்னாள் மாநில துணைத்தலைவர் குப்புசாமி, மாநில செயலாளர் ரீட்டா, மாவட்ட துணை தலைவர் சாமிநாதன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.