சேலம், மே 17: சேலம் மத்திய சிறையில் 1200க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் தண்டனை கைதிகளில் 25 பேர் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதினர். இதில் தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் கோபி(40) என்ற கைதி 412 மதிப்பெண் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார். 372 மதிப்பெண் பெற்ற கைதி கோவிந்தராஜூ 2ம் இடத்தையும், 366 மதிப்பெண் பெற்ற கைதி முத்து மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். தேர்ச்சி பெற்ற அனைத்துக் கைதிகளுக்கும் சிறை கண்காணிப்பாளர் வினோத், சிறை ஆசிரியர்கள் விஜயலட்சுமி, ஜெயசுதா, சுரேஷ், ராஜ்மோகன்குமார் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.
+
Advertisement


