கோவில்பட்டி, ஜூலை 1: திருப்புவனம் காவலாளி மரணத்தை கண்டித்து கோவில்பட்டி அருகே சிதம்பரபுரத்தில் கடம்பூர் ராஜூ எம்எல்ஏ தலைமையில் அதிமுகவினர் கண்டன பதாகை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட காவலாளி அஜித்குமார் உயிரிழந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து கோவில்பட்டி அருகே சிதம்பரபுரத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூ எம்எல்ஏ தலைமையில் அதிமுகவினர் கண்டன பதாகைகளை கையில் ஏந்தியபடி கோஷமிட்டனர்.போராட்டத்தில் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் தர், மாவட்ட துணை தலைவர் நித்திஷ் கண்ணன், மாவட்ட துணை செயலாளர் அண்ணாமலை விக்னேஷ், இணை செயலாளர்கள் சுந்தர், கிரிதர், கடம்பூர் நகர செயலாளர் வாசமுத்து, ஜெ. பேரவை மாவட்ட இணை செயலாளர் நீலகண்டன், ஜெ. பேரவை நகர செயலாளர் மோகன், ஐடி பிரிவு கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் பிரபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
+
Advertisement