Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

திருவாரூர் விதை பரிசோதனை நிலையத்தில் வேளாண். கல்லூரி மாணவர்கள் பயிற்சி

நீடாமங்கலம், மே 21: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வேளாண் கோட்டத்தில் தங்கி பயிற்சி பெற்று வரும் தஞ்சை தனியார் வேளாண்மைக் கல்லூரியின் நான்காம் ஆண்டு மாணவர்கள் 11 பேர் ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்தின்கீழ் (RAWE) கிராமத்தில் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர். இப்பயிற்சசியில் வேளாண் சார்ந்த தகவல்களை விவசாயிகளுக்கு பயிற்சி மூலம் தெரிவித்தல் மற்றும் வேளாண் சார்ந்த துறைகளில் பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.

இதில் ஒரு நிகழ்வாக திருவாரூரில் உள்ள விதை பரிசோதனை மையத்தில் பயிற்சி மேற்கொண்டனர். இந்நிகழ்வில் வேளாண் கல்லூரி மாணவர்கள் ஆஸ்டின்ராஜ், அபிஷேக் நாயர், தெய்வம் பிரபாகரன், அபிஷேக், அறிவழகன், அனாஸ், அறிவுமதி, தனுஷ், அசோக் குமார், பரத் குமார், கோகுல் பிரசாத் என 11 மாணவர்கள் கலந்து கொண்டனர். விதை சோதனை என்பது விதைகளின் தரம் மற்றும் தூய்மையை தீர்மானிக்கும் ஒரு முக்கியமான செயல்முறையாகும்.

விவசாயிகள் சரியான தரமான விதைகளை வாங்கி பயிரிடுவதை உறுதி செய்வதற்காக இந்த சோதனைகள் அவசியம்.இந்தியாவில், விதை சோதனை செய்வதற்கான விதிகள் மற்றும் விதிமுறைகள் இந்திய விதை சட்டம், 1966 மற்றும் அதன் விதிமுறைகளால் நிர்வகிக்கப்படுகின்றன. இந்த சட்டம் விதை சோதனை செய்ய அங்கீகரிக்கப்பட்ட விதை சோதனை ஆய்வகங்களை (Seed Testing Laboratories) பற்றியும் விவரிக்கிறது. மேலும், விதைப்பரிசோதனை பற்றிய பல்வேறு தகவல்களை கேட்டறிந்தனர்.