தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே முள்ளிக்காடு கிராமத்தை சேர்ந்த மாதவன் மனைவி சுதா (39). மகளிர் சங்க தலைவியாக உள்ள இவர், நேற்று தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
பாப்பிரெட்டிப்பட்டி அருகே, முள்ளிக்காடு கிராமத்தில், எனது கணவர் மாதப்பன் மற்றும் 2 மகன்கள், ஒரு மகளுடன் வசித்து வருகிறேன். நான் கடந்த 15 ஆண்டுகளாக மகளிர் சங்க தலைவியாக உள்ளேன்.
இந்நிலையில், எங்கள் வீட்டின் அருகேயுள்ள நபர், தினமும் மதுபோதையில் எங்களிடம் தகராறில் ஈடுபடுகிறார். மேலும், எங்கள் வீட்டின் மேற்கூரை மீது கற்களை எரிந்து சேதப்படுத்தி உள்ளார். இதனால், எனக்கும், குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. இதுகுறித்து, பாப்பிரெட்டிப்பட்டி போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, அந்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.