போடி, ஜூலை 14: போடி அருகே தேவாரம் கிருஷ்ணம்பட்டி தெற்கு காலனி தெருவை சேர்ந்தவர் பகவதி(47). இவர் தனது அண்ணன் பழனி(58) உடன் சேர்ந்து கட்டிட கான்ட்ராக்ட் வேலைகளை செய்து வருகிறார். நேற்று முன் தினம் மாலை பழனி டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆண்டிபட்டி பிராதுகாரன்பட்டி வடக்குதெருவை சேர்ந்த காயாம்பு மகன் சேட் என்பவர் ஓட்டி வந்த டிப்பர் லாரி டூவீலர் மீது மோதியது. இதில் பழனி கீழே விழுந்து படுகாயமடைந்தார். அவருக்கு தேனி மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரில் போடி தாலுகா எஸ்.ஐ விஜய் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய டிரைவர் சேட்டை கைது செய்தும், டிப்பர் லாரியை பறிமுதல் செய்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement


