நத்தம், ஜூலை 23: நத்தம் அருகே குட்டுப்பட்டி ஊராட்சி ஒத்தினிப்பட்டி தெற்கு காட்டில் கருப்பசாமி கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடி படையல் விழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டு ஆடி படையல் விழா நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி நேர்த்திக்கடனாக விடப்பட்ட 50க்கும் மேற்பட்ட ஆட்டு கிடாய்கள் வெட்டப்பட்டும், 40 சிப்பம் அரிசியிலும் சமையல் தயாரானது.
நேற்று அதிகாலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபராதனைகள் செய்து ஆடி படையல் வைத்து வழிபட்டனர். பின்னர் கறிவிருந்துடன் அன்னதானம் நடந்தது. இதில் ஒத்தினிப்பட்டி மற்றும் குட்டுப்பட்டி, பஞ்சையம்பட்டி, லெட்சுமிபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.