Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சாலையில் முறிந்து விழுந்த புளியமரம்

கடத்தூர், ஜூலை 23: கடத்தூர் அடுத்த வெங்கடதாரஅள்ளி சாலையில், ஆத்துபாலம் அருகே நெடுஞ்சாலைதுறைக்கு சொந்தமான புளியமரம் திடீரென முறிந்து சாலையில் விழுந்தது. இதனால், புட்டிரெட்டிபட்டி-கடத்தூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த பாப்பிரெட்டிப்பட்டி நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் கடத்தூர் போலீசார், பொக்லைன் மூலம் சாலையில் விழுந்த புளியமரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். இதனால் கடத்தூர்- புட்டிரெட்டிப்பட்டி சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.