நிலக்கோட்டை, ஜூலை 9: நிலக்கோட்டை அருகே விளாம்பட்டி பகுதியில் எஸ்ஐ ராமபாண்டியன் தலைமையில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிலுக்குவார்பட்டி- விளாம்பட்டி சாலையில் ஒருவர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தார். போலீசார் அவரை பிடித்து விசாரித்ததில் தேனி மாவட்டம், ஜி.கல்லுப்பட்டியை சேர்ந்த கணேசன் (28) என்பது தெரியவந்தது. மேலும் அவர் வைத்திருந்த பையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் அவர் கொடுத்த தகவல்படி மட்டப்பாறையை சேர்ந்த ராம்குமார் (42), நாகராஜ் (50). கல்லடிபட்டியை சேர்ந்த சவுந்தரபாண்டி (28) ஆகியோரது கடைகளில் இருந்த புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து, அவர்களையும் கைது செய்தனர். பின்னர் போலீசார் 4 பேரையும் திண்டுக்கல் மேஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி திண்டுக்கல் சிறையில் அடைத்தனர். இப்பகுதி கடைகளில் புகையிலை ெபாருட்கள் விற்க கூடாது, விற்றால் கைது நடவடிக்கை தொடரும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
+
Advertisement