Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

‘உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் இன்று தொடக்கம்

புதுக்கோட்டை: தமிழ்நாடு முதலமைச்சர் இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்” என்ற புதிய திட்டம் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. தமிழ்நாட்டில் கடைகோடி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு, அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத்துறையின் சேவைகள்/திட்டங்கள் ஆகியவற்றை அவர்கள் வசிக்கும் பகுதிக்குச் சென்று எடுத்துரைத்து, அவர்கள் எளிதில் பயனடையும் வகையில் ஏற்பாடுகள் செய்து தருவது இத்திட்டத்தின் நோக்கம் ஆகும்.

அதில், புதுக்கோட்டை மாவட்டத்தில், மாநகராட்சிபகுதியில் 29 முகாம்களும், அறந்தாங்கி நகராட்சி பகுதியில் 10 முகாம்களும், பொன்னமராவதி, கறம்பக்குடி, ஆலங்குடி, கீரனூர், கீரமங்கலம், இலுப்பூர், அன்னவாசல் மற்றும் அரிமளம் ஆகிய 8 பேரூராட்சி பகுதிகளில் தலா இரண்டு வீதம் 16 முகாம்களும், ஊராட்சி பகுதிகளில் 151 முகாம்களும், பெரிய நகரங்களில் 7 முகாம்களும் ஆக மொத்தம் 213 முகாம்கள் இன்று முதல் அக்டோபர் 21 வரை நடத்தப்பட உள்ளன.

மேற்படி முகாம்களின்போது நகரப்பகுதியில்ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும்சிறுபான்மையினர் நலத்துறை, கூட்டுறவு, உணவு மற்றும்நுகர்வோர் பாதுகாப்புத் துறை, எரிசக்தி துறை, சுகாதாரம்மற்றும் குடும்ப நலத்துறை, தகவல் தொழில்நுட்பம் மற்றும்டிஜிட்டல் சேவைகள் துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புறமேம்பாட்டுத் துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, மாற்றுத்திறனாளிகள்நலத்துறை ஆகிய 13 துறைகளிலிருந்து 43 வகையானசேவைகள் வழங்கப்பட உள்ளது.

அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று புதுக்கோட்டை மாநகராட்சி 17 மற்றும் 25 ஆகிய வார்டு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கு புதுக்கோட்டை மாநகராட்சி, எஸ்.வி.எஸ். சீதையம்மாள் திருமண மஹாலில், ‘உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில், மேற்கண்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு, தங்களது கோரிக்கை விண்ணப்பங்களை அளித்து பயன்பெற வேண்டும். மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.