சேலம், பிப்.26: சேலம் எருமாப்பாளையம் களரம்பட்டி பகுதியில் கிச்சிப்பாளையம் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது டூவீலரில் வந்த 2பெண்கள் வேகமாக திரும்பி சென்றனர். அவர்களை மடக்கி சோதனை செய்த போது, அவர்களிடம் இருந்து 165 மதுபாட்டில்கள் இருந்தது. டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை வாங்கி, சந்துகடைகள் மூலம் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அவர்கள், ஆலமரத்துக்காடு பகுதியை சேர்ந்த லட்சுமி (68) ராதிகா (47) என்பது தெரியவந்தது.அவர்களை போலீசார் கைது செய்தனர்.
+
Advertisement