Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சூதாடிய 2 பேர் கைது

கிருஷ்ணகிரி, பிப்.19: கிருஷ்ணகிரி தாலுகா எஸ்ஐ புகழவன் மற்றும் போலீசார், அணை கரையோரம் நேற்று ரோந்து சென்றனர். அப்போது, அப்பகுதியில் 4 பேர் பணம் வைத்து சூதாடிக்கொண்டு இருந்தனர். போலீசார் வந்ததும் அவர்கள் நாலாபுறமும் தப்பியோடினர். போலீசார் துரத்திச்சென்று 2 பேரை மடக்கிப் பிடித்தனர். 2 பேர் தப்பியோடி விட்டனர். பின்னர், அதே பகுதியை சேர்ந்த முத்து(28), கங்கலேரி ரியாஸ்(27) ஆகியோரை கைது செய்த ேபாலீசார், தப்பியோடிய சுரேஷ்(31), கரடிகுறி ஹரிஹரன்(31) ஆகிய 2 பேரையும் தேடி வருகின்றனர்.