Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மாவட்டத்தில் 15 தாசில்தார்கள் அதிரடி இடமாற்றம்

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் நிர்வாக நலன் கருதி, 15 தாசில்தார்களை அதிரடியாக இடமாற்றம் செய்து கலெக்டர் சதீஸ் உத்தரவிட்டுள்ளார். தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, நல்லம்பள்ளி, பென்னாகரம், பாலக்கோடு, காரிமங்கலம், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் ஆகிய 7 தாலுகா அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. கலெக்டர் அறிவுறுத்தும் அனைத்து வருவாய்த்துறை சார்பான அரசு பணிகளும், தாலுகா அலுவலகத்தின் வழியாக வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டு, அவர்கள் மூலம் செயல்படுத்தப்படுகிறது.

கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் போன்றவர்களின் பரிந்துரைகளின் பேரில் சாதிச் சான்றிதழ், வருவாய் சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் மற்றும் வாரிசு சான்றிதழ், நில உடமை சான்றிதழ் போன்று பல சான்றிதழ்கள் தாலுகா அலுவலகத்தில் வழங்கப்படுகின்றன. வட்டாட்சி அமைப்புக்குள் மக்களிடையே பிரச்னைகள் ஏதும் வந்து சட்டம், ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படாதவாறு முன்கூட்டியே செயல்படுவதற்கு வாய்ப்பாக இரண்டாம் நிலை நீதித்துறை நடுவராகவும் தாசில்தார் செயல்படுகிறார்.

இந்நிலையில், தர்மபுரி மாவட்டத்தில் 15 தாசில்தார்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, பென்னாகரம் தாசில்தார் பிரசன்னமூர்த்தி, நல்லம்பள்ளி தாசில்தாராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இங்கு பணியாற்றி வந்த சிவகுமார், மொரப்பூர் தர்மபுரி ரயில்வே அலகுக்கு தனி தாசில்தாராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இங்கு பணியாற்றி வந்த கலைச்செல்வி, மாவட்ட வளங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகத்தின் நேர்முக உதவியாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இங்கு பணியாற்றி வந்த கனிமொழி அரூர் ஆர்டிஓ.,வின் நேர்முக உதவியாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அரூர் ஆர்டிஓ நேர்முக உதவியாளர் கண்ணன், தர்மபுரி ஆயம் அலுவலக மேலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இங்கு பணியாற்றி வந்த கேசவமூர்த்தி தர்மபுரி அலுவலக மேலாளர் (பொ) ஆக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அதே போல், அருண்பிரசாத் தர்மபுரி கோட்டை ஆய அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இங்கு பணியாற்றி வந்த செல்வகுமார் பாத்துட்டு தனி தாசில்தாராக (ச.பா.தி) இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இங்கு பணியாற்றி வந்த ராதாகிருஷ்ணன், தர்மபுரி நீதியியல் அலுவலக மேலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இங்கு பணியாற்றி வந்த அசோக்குமார், பாலக்கோடு தாசில்தாராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இங்கு பணியாற்றி வந்த தாசில்தார் ரஜினி, தர்மபுரி தனி தாசில்தாராக (கு.பொ.வ) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இங்கு பணியாற்றி வந்த கருணாநிதி தர்மபுரி தனி வட்டாட்சியராக (முத்திரைத்தாள்) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இங்கு பணியாற்றி வந்த சவுகத் அலி தர்மபுரி தாசில்தாராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல், இங்கு பணியாற்றி வந்த சண்முகசுந்தரம் பென்னாகரம் தாசில்தாராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பணிமாறுதல் செய்யப்பட்ட தாசில்தார்கள் உடனடியாக புதிய பணியிடத்தில் சேர வேண்டும். பணி மாறுதல்கள் தொடர் பாக எவ்வித முறையீடுகளும், ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. தாசில்தார் மாறுதல் தவிர்க்கும் பொருட்டு, விடுப்பு கோரி மனு செய்தாலோ அல்லது மாறுதல் செய்த பணியிடத்தில் சேரத்தவறினாலோ தமிழ்நாடு குடிமைப்பணிகள் (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகளின் கீழ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று, தர்மபுரி மாவட்ட கலெக்டர் சதீஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் மேலும் கூறுகையில், ‘தர்மபுரி மாவட்டத்தில் வருவாய் அலகில் பணியாற்றும் தாசில்தார்கள் 15பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நிர்வாக நலன் கருதி அவர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்,’ என்றார்.