ஈரோடு, ஜூலை 23: ஈரோடு மாவட்டத்துக்குள் நடைபெற்ற ஆசிரியர் பயிற்றுனருக்கான பொது மாறுதல் கலந்தாய்வில் 12 பேர் ஆப்சென்ட் ஆகினர். சமக்ர சிக்ஷா (அனைவருக்கும் கல்வி இயக்கம்) சார்பில், ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் பகுதியில் உள்ள சமக்ர சிக்ஷா அலுவலகத்தில் நேற்று பிஆர்டிஇ. எனப்படும் ஆசிரியர் பயிற்றுனர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு மாவட்டத்துக்குள் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெற்றது.
மாறுதலுக்கு 22 பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால், 10 பேர் மட்டுமே பங்கேற்றனர். இதில், ஒருவர் மட்டுமே பணியிட மாறுதல் பெற்றார். ஒன்பது பேர் பணியிட மாறுதல் பெற விருப்பமில்லை என தெரிவித்தனர். 12 பேர் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை. இன்று (23ம் தேதி) மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல கலந்தாய்வு நடக்க உள்ளது. இதற்கு 26 பேர் விண்ணப்பித்துள்ளனர்.