மாற்றுத்திறனாளி பயணிகள் ரயில்வே சலுகை அடையாள அட்டையை ஆன்லைனில் பெறலாம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு மாற்றுத்திறனாளி பயணிகள் ரயில்வே சலுகை அடையாள அட்டையை ஆன்லைனில் பெறலாம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னை: தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: மாற்றுத்திறனாளி பயணிகளுக்கான ரயில்வே சலுகை அடையாள அட்டைகளை பெறுதல் மற்றும் புதுப்பித்தல் செயல்முறையை எளிதாக்கும் நோக்கில் இந்திய ரயில்வே புதிய டிஜிட்டல் முயற்சியை அறிமுகப்படுத்தியுள்ளது. சலுகை பயண டிக்கெட்டுகளைப் பெறுவதற்கு அவசியமான இந்த அடையாள அட்டைகள், இப்போது ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் மற்றும் புதுப்பிக்கலாம். இது ரயில்வே அலுவலகங்களுக்கு வருகையின் தேவையை நீக்குகிறது.
ஆன்லைன் திவ்யங்ஜன் (மாற்றுத் திறனாளிகள்) ஐடி விண்ணப்பத்திற்கான URL :https://divyangjanid.indianrail.gov.in. ஆகும். பார்வைக் குறைபாடு உள்ள நபர்கள், பார்வை முழுமையாக இல்லாதவர்கள், துணையின் உதவியின்றி பயணிக்க முடியாத மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், செவித்திறன் மற்றும் பேச்சு குறைபாடு உள்ள நபர்கள், எலும்பியல் ஊனமுற்றோர்/முடக்கவாத நோயாளிகள்/பாதுகாவலரின் உதவியின்றி பயணிக்க முடியாத நோயாளிகள் ஆகியோர் இச்சலுகையை பெறுவதற்கான தகுதி உள்ளவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.