திண்டுக்கல், நவ. 29: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட கணக்கெடுப்பு படிவங்கள் பூர்த்தி செய்து மீள பெறப்படுவது குறித்து மகளிர் சுய உதவிக் குழுவினர் மூலமாக விழிப்புணர்வு பேரணி திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம் செட்டிநாயக்கன்பட்டியில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் சரவணன் துவக்கி வைத்தார். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் சதீஸ்பாபு, திண்டுக்கல் மேற்கு தாசில்தார் சுல்தான் சிக்கந்தர், ஊராட்சி செயலர் மாரிமுத்து கலந்து கொண்டனர்.
பேரணியில், திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த முகாம் நடைபெற்று வருகிறது. இதில் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட கணக்கெடுப்பு படிவங்களை உடனடியாக பூர்த்தி செய்து இறுதி நாள் வரையில் காத்திருக்காமல் உடனடியாக வாக்காளர் நிலை அலுவலரிடம் வழங்க வேண்டும். என வலியுறுத்தி சென்றனர்.பேரணி செட்டிநாயக்கன்பட்டி துவங்கி காந்திநகர், சத்யா நகர் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு சென்றனர்.

