பழநி, அக். 16: பழநியில் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்காக பஸ் நிலையம் மற்றும் ரயில் நிலையத்தில் இருந்து குதிரை வண்டிகள் இயக்கப்படுகின்றன. இதற்காக 100க்கும் மேற்பட்ட குதிரை வண்டிகள் உள்ளன. தமிழகத்தில் பழநியில் மட்டுமே தற்போது வரை குதிரைவண்டி சவாரி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பழநியில் நேற்று நகராட்சி, வனத்துறை மற்றும் தன்னார்வலர்களின் சார்பில் குதிரைகளுக்கு தடுப்பூசி போடும் முகாம் நடந்தது. பழநி வையாபுரி குளக்கரையில் முதல்கட்டமாக நடந்த முகாமில் 60க்கும் மேற்பட்ட குதிரைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.


