நத்தம், டிச. 15: நத்தம் அருகே வத்திபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் ரத்தினக்குமார் தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ ஆண்டி அம்பலம், மத்திய ஒன்றிய செயலாளர் சேக் சிக்கந்தர் பாட்சா முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியர் லிங்கம் வரவேற்றார்.
விழாவில் 11ம் வகுப்பு பயிலும் மாணவ- மாணவிகள் 155 பேருக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது. இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமாரசாமி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் சாத்திபவுர், தேனம்மாள் தேன்சேகர் மற்றும் ஆசிரிய- ஆசிரியைகள், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


