Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பியூட்டிலிஷ்!

வீட்டிலேயே பார்லர் போன்ற சர்வீஸ்களை நீங்களே முறைப்படி செய்துகொள்ள வேண்டுமா அதற்கு உதவும் செயலிதான் பியூட்டிலிஷ் (Beautylish) . மேக்கப் மற்றும் ஸ்கின் கேர் டுடோரியல்கள், பிரபல மேக்கப் ஆர்டிஸ்ட்கள் மற்றும் பியூட்டி வலைபதிவாளர்களின் தெளிவான வழிகாட்டி வீடியோக்கள், படக் கட்டுரைகள் மூலமாக முறையான ஸ்டெப்களுடன் மெக்கப் கற்றுக்கொள்ளலாம். குறைந்தபட்சம் நம் பராமரிப்புக்கும், பண்டிகை, அலுவலக சந்திப்புகளுக்கு தயாராக, அடிப்படை மேக்கப் கூட கற்றுக்கொள்ளலாம். மேலும் எந்த சருமத்துக்கு என்ன நிற காஸ்மெட்டிக்ஸ், எந்த பிராண்ட் நல்லது என அனைத்தும் இந்தச் செயலியில் பெறலாம்.

பயனர்களின் புராடெக்ட் ரிவியூக்கள், கருத்துகள், என இவையும் இந்தச் செயலியில் பெறலாம். அழகுத் துறையில் புதுமைகள். லேட்டஸ்ட் பியூட்டி டிரெண்ட்கள், காலநிலைக்கு ஏற்ற காஸ்மெட்டிக்குகள் குறித்த தகவல்களும் இந்தச் செயலியில் பெறலாம். குறிப்பிட்ட பிராண்ட்களின் சலுகைகள், காம்போ ஆபர்கள் உள்ளிட்ட அறிவிப்பும் அதற்கான கூப்பன்களும் கூட இந்தச் செயலியில் கிடைக்கும். ஒருவருக்கு ஒருவர் தகவல்கள் பகிர்வு, ஆலோசனைகள் கேட்டறிதல், மேக்கப் ஆர்டிஸ்ட்களின் அறிவுரைகளும் இந்தச் செயலியில் கிடைக்கும்.

iOS மற்றும் ஆண்ட்ராய்டு போன்களின் இந்தச் செயலியைப் பெறலாம். விருப்பமிருந்தால் ஒருவேளை மேக்கப், காஸ்மெட்டிக்ஸ் இவற்றில் உங்களுக்கும் ஆர்வம் இருப்பின் நீங்களும் உங்களுக்கான ஆலோசனைகள் பக்கத்தை உருவாக்கி பயனர்களுக்கு வழிகாட்டலாம். அல்லது ஏற்கனவே உங்களிடம் யூடியூப் சேனல், அல்லது இன்ஸ்டா பக்கங்கள் இருப்பின் அங்கே பதிவிடும் வீடியோக்களை இங்கேயும் பகிர்ந்து உங்களுக்கான ஃபாளோயர்களையும் அதிகரிக்கலாம். இங்கே கட்டுரையாக உள்ளவற்றை செய்முறை விளக்கங்களுடன் வீடியோக்களாகவும் நீங்கள் பதிவிடலாம். முழுமையான பியூட்டி செயலியான பியூட்டிலிஷ் செயலி கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாகவே கிடைக்கும்.