தீவனத்தில் ரசாயனக்கலப்பு இல்லை...திருத்தணியில் ஒரு சூப்பர் கால்நடைப் பண்ணை!
கால்நடைகளில் ஏதாவது ஒன்றை வளர்த்தாலே அது இன்று லாபம் கொழிக்கும் தொழில்தான். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியைச் சேர்ந்த பாஸ்கர் ஆடு, மாடு, கோழி என மூன்றையும் வளர்த்து முறையான லாபம் பார்த்துக்கொண்டிருக்கிறார். தமிழகத்தின் தலைநகரான சென்னையையும், அண்டை மாநிலமான ஆந்திராவையும் இணைக்கும் பார்டர் பகுதியில் அமைந்திருக்கும் பாஸ்கரின் பண்ணைக்கு ஒரு காலைப்பொழுதில் சென்றோம். தனது கண்மணிகள்...
கொண்டைக்கடலை...சாகுபடி முறையும் விளைச்சல் கூட்டும் வழியும்..
தமிழகத்தில் பயறு வகைப்பயிர்களில் கொண்டைக்கடலை பயிரை சுண்டல் என்று அழைக்கப்படுகிறது. இதனை சாகுபடி செய்ய சிறந்த பருவம் இராபி பருவம்தான். அப்படிப்பட்ட கொண்டைக்கடலையை, கோயம்புத்தூர் மாவட்டத்தில் சர்கார்சாமகுளம், பொள்ளாச்சி வடக்கு, பொள்ளாச்சி தெற்கு, பெரியநாயக்கன்பாளையம், கிணத்துக்கடவு போன்ற பகுதியில் 2100 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கொண்டக்கடலைப் பயறுக்கு மிக குறைந்த அளவில் நீர் தேவை...
விளைச்சலுக்கு வில்லங்கம் வைக்கும் நூற்புழுக்கள்!
நூற்புழுக்களை நாம் சாதாரண கண்களால் காண இயலாது. நுண்ணோக்கிகள் வாயிலாக மட்டுமே காண முடியும். நிறமற்றதாகவும், ஆண், பெண் உருவ வேற்றுமை கொண்டதாகவும் இருக்கும். நூற்புழுக்கள் இனச்சேர்க்கையின் மூலமோ, இனச்சேர்க்க இல்லாமலோ, முட்டைகளை தனித்தனியாகவோ, குவியல் குவியலாகவோ, மண் மற்றும் தாவர திசுக்களில் இட்டு இனப்பெருக்கம் செய்யும். நூற்புழுக்கள் தன்னிச்சையாக தம் வாழ்நாளில் 2 சென்டிமீட்டர்...
சென்சார் சொல்லும் விவசாய வழிமுறைகள்...
இன்றைய வேளாண்மை, அறிவியலுடனும் தொழில் நுட்பத்துடனும் கலந்து புதிய பாதையை நோக்கி பயணிக்கிறது. விவசாயம் என்பது மாறி வரும் சூழ்நிலைகளுக்கு உடனுக்குடன் பதிலளிக்க வேண்டிய ஒரு செயற்பாடாக மாறியுள்ளது. முன்னோர் காலத்தில் விவசாயி நிலத்தில் நேரில் நின்று கணிப்புகளை செய்ததே வழக்கமாக இருந்தது. ஆனால் இப்போது நிலம் தானாகவே பேசும் நிலையை உருவாக்கும் காலம் வந்துவிட்டது....
கோமாரி நோய் தடுப்பூசி முகாம்!
தேசிய கால்நடை நோய்த்தடுப்பு திட்டத்தின் கீழ் தமிழகத்தின் பல்வேறு பகுதி களில் கறவை மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த 2ம் தேதி தொடங்கிய இந்தாண்டுக்கான 7ம் சுற்று தடுப்பூசி முகாம் வரும் 22ம் தேதி வரை தொடர்ந்து நடைபெறுகிறது. இதில் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த...
கத்தரி, வெண்டை, தக்காளி... இயற்கை விவசாயத்தில் அசத்தும் அரசுப்பள்ளி ஆசிரியர்!
திருப்பத்தூர் மாவட்டம் பாச்சல் அருகே உள்ள மூக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் அங்குள்ள அரசுப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். இதனிடையே இயற்கை விவசாயியாகவும் வலம் வருகிறார். பள்ளி நேரம் போக மீதி நேரத்தில் தனக்கு சொந்த நிலத்தில் கத்தரி, வெண்டை, தக்காளி, கம்பு உள்ளிட்ட பயிர்களை இயற்கை முறையில் சாகுபடி செய்து அசத்தி வருகிறார். ஒரு காலைப்பொழுதில்...
மீன் வளர்த்த வயலில் நெல் சாகுபடி!
சிறு சிறு ஏரிகள் ஒன்றானது போல் வீட்டைச்சுற்றி மீன் வளர்ப்புக்குளங்கள் அமைந்திருக்கின்றன. அவற்றில் சிறிதும், பெரிதுமாக மீன்கள் நீந்துகின்றன. இந்த மீன்களுக்கென்று தீவனம் எதுவுமில்லை. பாசிதான் எல்லாமே. இந்தக் குளங்கள் வெறும் மீன் வளர்ப்புக்குளங்கள் மட்டுமல்ல. நெல்மணிகள் மூட்டை மூட்டையாக விளையும் விளைநிலமும் கூட. இந்த நெல் வயலுக்கென்று எந்த உரங்களும் போடப்படுவதில்லை. மீனின்...
6 வகை கீரை... பல வகை காய்கறி... அத்தனையும் ஆர்கானிக்!
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு வட்டாரத்திற்கு உட்பட்ட ஒரு கிராமம் குப்பம்கண்டிகை. சுமார் 400 வீடுகளுக்கு மேல் உள்ள இந்த கிராமத்தின் பிரதான தொழில் விவசாயம்தான். விவசாய நிலம் வைத்திருப்பவர்கள் சாகுபடி செய்கிறார்கள். நிலம் இல்லாதவர்கள் அந்த ஊரில் விளைகிற பொருட்களை வாங்கிச்சென்று சுற்றுப்புறங்களில் உள்ள ஊர்களில் விற்பனை செய்கிறார்கள். நெல் சாகுபடிக்கு 80 சதவீதம் முக்கியத்துவம்...
எள் விளைச்சலை முடக்கும் பூவிதழ் நோய்... கட்டுப்படுத்த சில வழிமுறைகள்!
தமிழகத்தின் அனைத்து பகுதி களிலும் பயிரிடப்படும் லாபகரமான பயிர் என்ற பெருமையைக் கொண்டது எள் பயிர். இதைப் பயிரிடும் முறை மிகவும் எளிது. பராமரிப்பு முறை அதைவிட எளிது. குறுகிய காலத்தில் அறுவடை செய்து விடுலாம். விலையும் நன்றாக இருக்கும். இதுபோன்ற காரணங்களால் அனைத்து விவசாயிக்கும் விருப்பமான பயிராக இருக்கிறது இந்த எள். இத்தகைய எள்...