தர்மபுரி, டிச.12: தர்மபுரி மாவட்டம், கடத்தூர் பகுதியில் விதிகளை மீறி வெடிபொருள் கிடங்கு செயல்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், கடத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தா மற்றும் போலீசார் அப்பகுதியில் உள்ள சவுந்தர்ராஜன்(69) என்பவருக்கு சொந்தமான வெடிபொருள் கிடங்கில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, விதிகளை மீறி பெயர்- விலாசம் உள்ளிட்ட விவரங்களை முறையாக பதிவு செய்யாமல், லாப நோக்கத்தோடு, பலருக்கு வெடி மருந்துகளை சப்ளை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக, செப்டம்பர் 6ம் தேதியில் இருந்து 16ம் தேதி வரை, அதிக விற்பனை செய்தது தெரியவந்தது. மொத்தம் 50 கிலோ வெடிமருந்து, எலக்ட்ரிக் டெட்டனேட்டர் 10, 750 மீட்டர் ஒயர் உள்ளிட்டவை விதிமுறைக்கு புறம்பாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து குடோன் உரிமையாளர் சவுந்தர்ராஜனை கைது செய்து, தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
+
Advertisement


