தர்மபுரி, டிச.8: கர்ப்பிணிகளை இரவில் வரவழைத்து கருவின் பாலினத்தை தெரிவிக்கும் கும்பலை பிடிக்க, சேலம் உள்பட 4 மாவட்டங்களில் சுகாதார துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சேலம் மாவட்டம், பேளூர் பகுதியில் மாவட்ட சுகாதார துறையினர் கடந்த 2ம்தேதி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, ஒரு வீட்டில் நவீன ஸ்கேன் மிஷினை வைத்து கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்று பாலினத்தை கண்டறிந்து விதிமுறையை மீறி தெரிவித்த சின்னசேலம் கொடுகூரை சேர்ந்த வெங்கடேசன் (50), புரோக்கர் லதா, வீட்டு உரிமையாளர் சக்திவேல் ஆகியோரை பிடித்து வாழப்பாடி போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் மாவட்டங்களை சேர்ந்த கர்ப்பிணி பெண்களை இங்கு அழைத்து வந்து, நவீன ஸ்கேன் கருவி மூலம் கருவின் பாலினத்தை தெரிவித்து வந்துள்ளனர். இதற்காக ரூ.30 ஆயிரம் வரை கட்டணமாக வசூலித்துள்ளனர்.
+
Advertisement


