Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

நடப்பு சாகுபடி பருவத்திற்கு 5,585 டன் உரங்கள் இருப்பு

*விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் தகவல்

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்ததாவது:

தஞ்சாவூர் மாவட்டத்தில் 2024-25 ஆம் ஆண்டிற்கான சம்பா பருவத்தில் 3,40,000 ஏக்கர் நெல் பரப்பு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 3,12,000 ஏக்கர் நெல் நடவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்பொழுது பெய்து வரும் வடகிழக்கு பருவமழை காரணமாக 1142.85 ஹெக்டர் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் 2024-25 ரபி பருவத்தில் பயிர் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்திட ஷேமா பொது காப்பீடு நிறுவனமும், அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிட் (AICL) நிறுவனமும் தேர்வு செய்யபட்டுள்ளது. நிலக்கடலைக்கு ஏக்கருக்கு ரூ.443 (பிரீமியம்) ஆகும். இதற்கான கடைசி நாள் 31.01.2025 ஆகும். விண்ணப்பிக்கும் போது தகவல்களை குறிப்பாக பயிர் மற்றும் கிராமத்தின் பெயர் சரிபார்த்தி்ட கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பு 2024-25 ஆம் ஆண்டில் மண்வளம் காக்கும் வகையில் ”மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்” என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் இவ்வாண்டு 116 கிராம ஊராட்சிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு தரிசு நிலங்களில் முட்புதர்கள் அழிப்பு . வரப்பில் உளுந்து, தொழு உரம் உயிரி உரங்கள். உயிர் கட்டுப்பாட்டு காரணிகள் நுண்ணூட்ட கலவை மற்றும் பேட்டரி தெளிப்பான்கள் விநியோகிக்கப்பட உள்ளது. மேலும் தரிசு நில தொகுப்பு தேர்வு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. சம்பா மற்றும் தாளடி பருவத்திற்கு தேவையான யூரியா, டிஏபி, காம்ப்ள்க்ஸ் உரங்கள் தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் 2024-25 நிதியாண்டில் செயல்படுத்தப்பட்ட முக்கிய திட்டங்கள் தேசிய தோட்டக்கலை இயக்கம், தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம் , மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டம் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டம் பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டம் ,கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் ஆகும்.

ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் 80 சதவீதம் செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயனாளிகள் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகியோ அல்லது tnhorticulture, tn.gov.in < http://tn.gov.in/ > (TN- HORTNET) இணையதளத்தில் பதிவு செய்தோ பயன் பெறலாம்.

கூட்டுறவுத்துறை மூலம் 2024-25 ஆம் ஆண்டுக்கு 585 கோடி நிர்ணயிக்கப்பட்ட குறியீட்டில், தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் 01.04..2024 முதல் 7.12.2024 வரை 375.92 கோடி வழங்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மண்டலத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் நடப்பு சாகுபடி பருவத்திற்கு 5585 டன் உரங்கள் தற்பொழுது இருப்பில் உள்ளது.

சிறப்பாக செயல்பட்டு வரும் உழவர் சந்தைகள்

தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, கும்பகோணம், திருக்காட்டுப்பள்ளி, பாபநாசம் மற்றும் பேராவூரணி ஆகிய 6 இடங்களில் உழவர் சந்தைகள் சிறப்புடன் செயல்பட்டு வருகின்றன. இதுவரை இந்த 6 உழவர் சந்தைகளிலும் ரூ. 53.92 கோடி மதிப்பில் 11,843 மெ.டன் காய்கறி வரத்து வந்துள்ளது. இதுவரை சராசரியாக 169 விவசாயிகளும் 6366 நுகர்வோரும் பயனடைந்துள்ளார்கள்.

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை

குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலைக்கு 2023-24 அரவைப் பருவத்தில் கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள சிறப்பு ஊக்கத்தொகை அரசு ஆணைப்படி டன் ஒன்றுக்கு ரூ.215 வீதம் 835 விவசாயிகளுக்கு 98,661 டன்னிற்கு ரூ.2.12 கோடி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு கலெக்டர் பிரியங்கா பங்கஜம் பேசினார்.