கடலூர், நவ. 27: கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நவம்பர் மாத விவசாயிகள் குறைகேட்பு மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் வரும் 28ம் தேதி புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறுவதாக இருந்தது. தற்போது விடுக்கப்பட்டுள்ள வானிலை அறிக்கையின்படி கடலூர் மாவட்டத்தில் 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், 28ம் தேதி(நாளை) நடைபெறுவதாக இருந்த விவசாயிகள் குறைகேட்பு மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் ரத்து செய்யப்படுகிறது, என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
+
Advertisement

