விருத்தாசலம், ஆக. 27: விருத்தாசலம் அருகே கார்குடல் அணைக்கட்டு பகுதியை சேர்ந்தவர் விஜய். கூரை வீட்டில் வசித்து வருகிறார். இவரது மனைவி செவிலியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று விஜய் இரண்டு குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்பிவிட்டு, பழ வியாபாரத்திற்கு சென்றுவிட்டார். அப்போது மதியம் இவரது வீடு மர்மமான முறையில் தீ பிடித்து எரிந்துள்ளது. இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் விருத்தாசலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். அதன்பேரில் அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் வீட்டில் இருந்த பீரோ, டிவி, கல்வி சான்றுகள், அடையாள அட்டைகள் எரிந்து நாசமாயின. மேலும் அருகில் இருந்த நாராயணன் என்பவரது வீட்டிலும் தீ பரவி வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதம் ஆகின.
+
Advertisement