கல்வராயன்மலை, ஆக. 7: கல்வராயன்மலையில் திருமணமாகி 45 நாட்களில் கணவன் தற்கொலை செய்துகொண்டார். மனைவி தற்கெலை முயற்சியில் ஈடுபட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை கிளாக்காடு ஊராட்சி கூடாரம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் மணிகண்டன்(30). இவருக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகள் சந்தியா(25) என்பவருக்கும் கடந்த 45 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஆனால் 45 நாட்களாக கணவன், மனைவிக்குள் எவ்வித பேச்சுவார்த்தை இல்லாமல் குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மணிகண்டன் தன்னுடைய விவசாய நிலத்திற்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்றவர் நிலத்தில் வைத்திருந்த களைக்கொல்லி மருந்தை எடுத்து குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதை அறிந்த மனைவி சாந்தாவும் வீட்டில் இருந்த களைக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயற்சித்தார். உறவினர்கள் அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கரியாலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement