தேவையான பொருட்கள்
1/2 கப் சேமியா
2 கப் தண்ணீர்
1 கப் கட்டித்தயிர்
உப்பு தேவையான அளவு
தாளிக்க :
2 டீஸ்பூன் எண்ணை
1/4 டீஸ்பூன் கடுகு
1/2டீஸ்பூன் உளுந்து பருப்பு
1/2டீஸ்பூன் கடலை பருப்பு
5 முந்திரி (விருப்பப்படி)
1 வெங்காயம்
1பச்சை மிளகாய்
1 வற்றல் மிளகாய்
1/2 டீஸ்பூன் நறுக்கிய இஞ்சி
கறிவேப்பிலை
1/3 கப் மாதுளை முத்துக்கள்
மல்லி இலை
செய்முறை:
வாணலியை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் சேமியாவை சேர்த்து வறுத்து எடுக்கவும்.ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து ஸ்டவ்வில் வைத்து கொதித்ததும், வறுத்து வைத்துள்ள சேமியாவை சேர்த்து மூன்று நிமிடங்கள், வேகவைக்கவும். தண்ணீர் வற்றியதும் இறக்கவும். மிதமான சூட்டில் வைத்துக்கொண்டு வேகவைக்கவும்.சேமியா வேகும் நேரத்தில் மற்ற பொருட்களை தயாராக எடுத்து, நறுக்கி வைத்துக் கொள்ளவும். தயிரை எடுத்து வைக்கவும்.ஒரு வாணலியில் எண்ணை ஊற்றி ஸ்டவ்வில் வைத்து சூடானதும், கடுகு, உளுந்து, கடலை பருப்பு முந்திரி சேர்த்து பொரிந்ததும், நறுக்கி வைத்துள்ள வெங்காயம், மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்க்கவும்.சூடு தணியும் வரை வைக்கவும்.பின்னர் வேகவைத்துள்ள சேமியாவை ஒரு பௌலில் சேர்த்து, உப்பு, தயாராக வைத்துள்ள தயிர், தாளித்து வைத்துள்ள வெங்காய கலவை, மாதுளை முத்துக்கள், நறுக்கி வைத்துள்ள மல்லி இலை எல்லாம் சேர்த்து நன்கு கலந்தால் மிகவும் சுவையான தயிர் சேமியா தயார்.