தேவையானவை
வெள்ளைப் பூசணிக்காய் துண்டுகள் - 2 கப்
வேர்க்கடலை - கால் கப்
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - 1 தேக்கரண்டி.
தாளிக்க
கடுகு, உளுந்தம்பருப்பு -
தலா அரை தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - 1 கொத்து
மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி.
செய்முறை:
வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை ஒவ்வொன்றாகப் போட்டு தாளித்து பூசணித்துண்டுகள் மற்றும் உப்பு சேர்க்கவும். தண்ணீர் ஊற்றவேண்டாம், மூடி போட்டு வேகவிடவும். 10 - 15 நிமிடங்களில் வெந்துவிடும். இடையிடையே கிளறிவிடவும். வெந்ததும் கரகரப்பாக பொடித்த வேர்க்கடலையை தூவி இறக்கவும். வேர்க்கடலைக்கு பதில் தேங்காய்த்துருவலும் சேர்க்கலாம். சத்தான வெள்ளைப்பூசணி பொரியல் தயார்.